- பல்வேறு தரப்பட்ட வேளாண் சாகுபடி சூழலில், பகுதி வாரியான குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை கண்டறிய பண்ணை அளவிலான சோதனைகள் நடத்துவது.
- தொழில்நுட்ப ஒப்பிட்டு அளவிடல், தொழில்நுட்பதில் சிறு அளவிலான மாற்றம் செய்தல் மற்றும் செயல்விளக்கம் செய்தல் முலமாக பகுதிக்கேற்ற தொழில்நுட்பங்களை மாவட்ட அளவில் உருவாக்குதல்.
- விவசாயிகளின் நிலங்களில் பல்வேறு பயிர்கள் மற்றும் வேளாண் தொழில்களின் உற்பத்தி திறனை அறிந்திட முதல் நிலை செயல் விளக்கம் செயல்படுத்துவது.
- மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து உரிய விரிவாக்கப் பணிகள் முலமாக அதிக அளவிலான வேளாண் பெருமக்களுக்கு விழிப்புணர்வு உருவாக்குவது.
- நல்ல தரமான விதை, நடவு இடுபொருட்கள், கால்நடை, பறவை, மீன் மற்றும் பல்வேறு வேளாண் உயிர் பொருட்களை உற்பத்தி மற்றும் விநியோகம் செய்வது.
- மாவட்டத்தின் வேளாண் வருமானத்தை மேம்படுத்திட பொதுத்துறை, தனியார் தன்னார்வ அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு துணையாக வேளாண் தொழில்நுட்பங்கள் நிறைந்த அறிவு மற்றும் மையமாக செயல்படுதல்.