வம்பன் 8 உளுந்து ரகத்தின் வயல் விழா



வயல் தின விழா

   ஒட்டபிடாரம், கருங்குளம் விளாத்திகுளம் வட்டாரங்களில் பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி விவசாயமே மேற்க்கொண்டு வருகின்றனர். எனவே 65 நாட்களில் மகசூல் தரக்கூடியதும், வறட்சி மற்றும் மஞ்சள்நரம்பு நோய்க்கு எதிர்ப்புதிறன் கொண்டதுமான வம்பன் 8 உளுந்து ரகம் தூத்துக்குடி வேளாண் அறிவியல் மையத்தால் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தொகுப்பு முதல்நிலை செயல்விளக்கத் திட்டத்தின் மூலமாக ஒட்டநத்தம் கிரமத்தில் 50 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விதை ,இதர இடுபொருட்களான பயிரின் வளர்ச்சியை தூண்டக்குடியது மற்றும் மகசூல் அதிகரிக்ககூடியதுமான பயிறுவண்டர் வளர்ச்சி ஊக்கிகரைசல், உயிரி உரம் ஆகியன வழங்கப்பட்டு, நிலைய மற்றும் களப்பயிற்ச்சிகள் வழங்கப்பட்டது. மேலும் சாகுபடி செய்த தோட்டங்களுக்கு நேரடி ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

   இறுதியாக ஒட்டநத்தம் கிராமத்தில் சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் இணைந்து வயல்தினவிழா கொண்டடப்பட்டு விவசாயிகள் பெற்ற மகசூல் மதிப்பிடப்பட்டது. விவசாயிகள் கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. பயனாளிகள் இந்த ரகத்தின் பயன்களை மற்ற விவசாயிகளுக்கு எடுத்து கூறினர். இந்த வம்பன் 8 உளுந்து ரகமானது சராசரியாக எக்டேர்க்கு 9.6 குவிண்டால் மகசூல் தரக்கூடியது.

   குறைந்த நாட்களில் அதிக மகசூல் அளிக்க கூடிய வம்பன் 8 ரகம் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு மிகுந்த பலன் அளிக்க கூடிய ரகமாக அறியப்பட்டது. இதனை பரவலாக்கம் செய்திட வேளாண் அறிவியல் மையம் பல்வேறு முயற்ச்சிகளை மேற்க்கொண்டுள்ளது. இந்தரகம் மற்றும் இடுபொருள் தேவைக்கு தூத்துக்குடி மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தினை அணுகி பெற்றிடுமாறு நிலயத்தின் முதன்மைவிஞ்ஞானி மற்றும் சீனிவாசன் அவர்கள் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியினை வேளாண் அறிவியல் மையத்தின் உழவியல் துறைவிஞ்ஞானிமுருகன், பயிர் பாதுகாப்புதுறை விஞ்ஞானி முத்துகுமார் மற்றும் ஒட்டநத்த உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் சுப்புராமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தினர். இவ்விழாவில் வேளாண்மை விரிவாக்க பணியாளர்களும் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண் விரிவாக்கத்துறை விஞ்ஞானி பகவத்சிங் நன்றி கூறினார்.