வீரிய ஒட்டு காய்கறி சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த திறன் வளர் பயிற்சி



இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் நபார்ட் வங்கி தூத்துக்குடி இணைந்து வீரிய ஒட்டு காய்கறி சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த 3 நாள் பயிற்சி விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தின் சிறு மற்றும் குறு விவசாயிகளின் உற்பத்தி மற்றும் மகசூலை வீரிய ஒட்டு காய்கறி சாகுபடி மூலமாக உயர்த்துதல் மற்றும் விவசாயிகளிடையே பரவலாக்கம் செய்தல் என்ற நோக்கத்த்தோடு பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சிக்கு தலையால் நடந்தான் குளத்தைச் சேர்ந்த சிறு மற்றும் குறு காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இப்பயிற்சியில் சாதாரண ரகம் மற்றும் வீரிய ஒட்டு ரக சாகுபடி முறைகள் மற்றும் அதன் பயன்கள், வீரிய ஒட்டு மிளகாய், கத்திரி, தக்காளி மற்றும் வெண்டை சாகுபடி முறைகள், வீரிய ஒட்டு காய்கறி சாகுபடி பின்பற்ற வேண்டிய பயிர் பாதுகாப்பு முறைகள், காய்கறி விற்பனை மற்றும் சந்தைபடுத்துதல், வேளாண் விவசாயிகளின் வருவாயினை இருமடங்காக உயர்த்தும் அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள் குறித்து வல்லுநர்கள் பயிற்சி அளித்தனர். மேலும் அரசு தோட்டகலை துறையின் திட்டங்கள் அதனை பெரும் வழிமுறைகள் பற்றி திரு.பாண்டியராஜன் தோட்டக்கலை அலுவலர், புதூர் தூத்துக்குடி எடுத்துரைத்தார். இதனை அடுத்து திரு. கணேசன், பாண்டியன் கிராம வங்கி மேலாளர் விவசாயிகளுக்கு வங்கியில் நிதியுதவி பெரும் வழிமுறைகள் பற்றிவிளக்கினார்.

இறுதி நாளன்று பயனாளிகள் சக்கம்மாள்புரம் கிராமத்தின் முன்னோடி விவசாயி திரு. சரவணன் அவர்களின் தோட்டத்தில் பசுமை குடிலில் வீரிய ஒட்டு வெள்ளரி சாகுபடியினை நேரடியாக கண்டனர். இறுதியாக திரு.விஜயபாண்டியன் உதவி பொது மேலாளர் நபார்ட் வங்கி தூத்துக்குடி, மருத்துவர் சீனிவாசன் முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் வேளாண்மை அறிவியல் மையம் தூத்துக்குடி, திரு.வேல்முருகன் விஞ்ஞானி (தோட்டக்கலை), திரு.முருகன் விஞ்ஞானி (உழவியல்), திரு.முத்துக்குமார் விஞ்ஞானி (பயிர்பாதுகாப்பு), திரு. பகவத்சிங் விஞ்ஞானி (வேளாண் விரிவாக்கம்)  ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் காய்கறி வளர்ப்பு குறித்த கையேடும் வழங்கப்பட்டது