வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான மண்வள அட்டைப்படி உரமிடல் மற்றும் மக்காசோள படைப்புழு மேலாண்மை பயிற்சி



ஸ்காட்  வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் வேளாண்மை துறை தூத்துக்குடி இணைந்து விவசாய இடுபொருள் விற்பனையாளர்களுக்கு மக்காசோளத்தில் படைப்புழு மேலாண்மை முறைகள் மற்றும் மண்வள அட்டை பரிந்துரை படி உரமிடல் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காசோளம் 55 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. கடந்த பருவத்தில் மக்காசோளத்தில் படைப்புழு எனும் புதிய பூச்சியினால் தாக்கப்பட்ட்து. இதன் தாக்குதலால் பெரும்பாலான மக்காசோள பயிர்கள் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், விளைச்சலும் வெகுவாக குறைந்தது. தூத்துக்குடி மட்டுமல்லாது தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் படைப்புழு தாக்குதல் கண்டறியப்பட்டது.

இவ்வாண்டு படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட இடுபொருள் விற்பனையாளர்களுக்கு படைப்புழு கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த பயிற்சியினை வேளாண்மை துறை ஏற்பாடு செய்திருந்தது.

            இப்பயிற்சியினை டாக்டர் V . சீனிவாசன்,  முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் மையம் தூத்துக்குடி வரவேற்று பேசினார். அடுத்து தலைமையுரை ஆற்றிய திரு M.S. மகாதேவன் வேளாண் இணை இயக்குனர், தூத்துக்குடி பயிற்சியாளர்களை இப்பயிற்சியினை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு   கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, T.S. பாலசுப்பிரமணியன்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை),  T . தமிழ்மலர், வேளாண்மை இணை இயக்குநர் (மத்திய திட்டம்), N.A.M. இராஜாசிங், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) மற்றும் A. நாட்சியார் அம்மாள், துணை இயக்குனர் (விதை ஆய்வு) ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே விநியோகிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அடுத்ததாக, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர்கள் முனைவர் பாலகிருஷ்ணன் மற்றும் முனைவர் ரவி ஆகியோர் படைப்புழுவினை  அடையாளம் காணும் முறை, அதன் வளர்ச்சி பருவங்கள், பரவும் முறைகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் பல்வேறு வழிமுறைகளை பற்றியும் எடுத்துரைத்தனர்.

மேலும் வேளாண் அறிவியல் மையத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் A. முருகன் மற்றும் P.K. முத்துக்குமார் ஆகியோர் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மக்காசோள பயிரினை சாகுபடி செய்யும் முறைகளையும், மண்வள அட்டையின் பரிந்துரைபடி உரமிடல் பற்றி விரிவாக எடுத்து கூறினர்.  

இப்பயிற்சியில் படைப்புழு தாக்குதல் குறித்த காணொளி ஒளிபரப்பபட்ட்து. மேலும் மேலாண்மை முறைகள் குறித்த தொழில்நுட்பங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது. படைப்புழுவினை கட்டுப்படுத்த ஊடுபயிராக உளுந்து, பாசி மற்றும் தட்டை பயிறு ஆகிவற்றையும், வரப்பு பயிராக சூரிய காந்தி மற்றும் கம்பு நேப்பியர் தீவன புல்லும் பயிரிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் படைப்புழுழுவின் முட்டைகளை இனங்கண்டு  அளிக்கவும், இனக்கவர்ச்சி பொறிகள் வைக்கவும்,  தெளிக்கும் போது மக்காசோள பயிரின் குருத்துகளில் தெளிக்குமாறும் மற்றும்   பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில்  மாவட்டம் முழுவதிமிலிருந்து 120 உரம், விதை மற்றும் பூச்சி மருந்து விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். இடுபொருள் விற்பனையாளர்களின்  செயலாளர் L.S. மனோகரன் அவர்கள் அனைத்து கடை உரிமையாளர்களையும் இந்த பயிற்சியில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை தவறாமல் கடைப்பிடித்து வரும் ரபி  சாகுபடியின் போது மக்காசோள படைப்புழுவினை ஆரம்பத்திலேயே நன்கு கடைபிடித்திட உதவும்படி வேண்டிக்கொண்டார். இறுதியாக, N. மலர்விழி, வேளாண் அலுவலர்  (தர கட்டுப்பாடு) நன்றியுரை அளித்தார்.