வேளாண்மை அறிவியல் மையத்தில் தென்னை மரம் ஏறும் பயிற்சி



தூத்துக்குடி ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் இனைந்து தென்னை விவசாயிகளுக்கு ஆறு நாட்கள் தென்னை மரம் ஏறும் கருவியை பயன்படுத்தி மரம்  ஏறும் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த தலையால் நடந்தான் குளம் கிராமத்தை சேர்ந்த தென்னை சாகுபடி செய்துள்ள 20 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கிராமம் பாரத பிரதமர் மந்திரியின் 2022 குள்ளாக விவசாயிகளின் வருவாய் இருமடங்காக உயர்த்துதல் திட்டத்தின் கீழ் வேளாண் அறிவியல் மையம் மூலம் தத்தெடுக்கப்பட்ட மாதிரி கிராமம் ஆகும். அங்குள்ள விவசாயம், தோட்டக்கலை, கால்நடை சார்ந்த பல தொழில்நுட்ப பயிற்சிகள் வேளாண் அறிவியல் மையத்தின் பல்வேறு துறை விஞ்ஞானிகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னைமர விவசாயிகளுக்கு ஆறு நாள் பயிற்சி வழங்க பட்டது. இப்பயிற்சியில் தென்னை சாகுபடி முறைகள், நோய்  மற்றும் பூச்சிமேலாண்மை முறைகள் மற்றும் தென்னைமர கழிவு மறுசுழற்சி போன்றவற்றிற்கும் வேளாண் அறிவியல் மைய தோட்டத்தில் செயல்விளக்கத்தோடு பயிற்சி அளிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கலந்து பயன்பெற்ற பயனாளிகளுக்கு தென்னை வளர்ச்சி வாரியத்தின் தொழில்நுட்ப அலுவலர் பாரதிபிரியன், வேளாண் அறிவியல் மைய முதன்மை  விஞ்ஞானி  மற்றும் மருத்துவர் சீனிவாசன், தொழில்நுட்ப வல்லுநர்கள் வேல்முருகன், முருகன், முத்துக்குமார், பகவத்சிங், ஆகியோர் சான்றிதழ் வழங்கி மரம் ஏறும் போட்டியில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிகளும் வழங்கினர். நிகழிச்சியின் இறுதியில் பயனாளிகள் அனைவர்க்கும் தென்னை மரம் ஏறும் கருவி வழங்கப்பட்டது.  பயிற்சியினை ஸ்காட் நிறுவங்களின் தலைவர், முனைவர் கிளிட்டஸ்  பாபு ஆலோசனையின்பேரில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை அறிவியல் மைய தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  ஏற்பாடு செய்ந்திருந்தனர்.