மக்கள் தொடர்பு மண் பரிசோதனை & கால்நடை சிகிச்சை முகாம்



              வேளாண்மை அறிவியல் மையம் தூத்துக்குடி 2019-20 ஆம் ஆண்டில் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் மக்கள் தொடர்புக்காக மண் பரிசோதனை மற்றும் கால்நடை சிகிச்சை முகாமினை நடத்தினர். வேளாண் அறிவியல் மையத்தின் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை விவசாயிகள் தெரிந்து கொள்ளும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்பட்டது. மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாமல் மண் மாதிரி எடுக்கும் முறை பற்றிய செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது.

              11-6-19 அன்று ராஜபுதுக்குடி கிராமத்தில் நடத்தப்பட்ட முகாமில், 50 மண் மாதிரிகள் பெறப்பட்டன. மேலும் 91 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் அய்யனார் ஊத்து கால்நடை மருத்துவமனை மருத்துவர் பாலமுருகன் மற்றும் அவரது குழுவினர் கலந்து கொண்டனர். 90கும் மேற்பட்ட விவசாயிகள் இம் முகாமில் பயனடைந்தனர்.

             13-6-19 அன்று K.குமாரபுரத்தில் நடத்தப்பட்ட முகாமில்  40 மண் மாதிரிகள் பெறப்பட்டன. மேலும் 400 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் மரு.கருப்பசாமி மற்றும்  அவரது குழுவினர் கலந்து கொண்டனர். 52கும் மேற்பட்ட விவசாயிகள் இம் முகாமில் பயனடைந்தனர்.
            25-6-19 அன்று வில்லிசேரி கிராமத்தில் நடத்தப்பட்ட முகாமில் 650 மண் மாதிரிகள் பெறப்பட்டன. மேலும் 1040 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் மரு.பாலமுருகன் மற்றும் அவரது குழுவினர் கலந்து கொண்டனர். 135 கும் மேற்பட்ட விவசாயிகள் இம் முகாமில் பயனடைந்தனர்.
            27-6-19 அன்று கொல்லகிணறு கிராமத்தில் நடத்தப்பட்ட முகாமில் 40 மண் மாதிரிகள் பெறப்பட்டன. மேலும் 201 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் மரு.கதிரேசன் மற்றும் அவரது குழுவினர் கலந்து கொண்டனர். 32கும் மேற்பட்ட விவசாயிகள் இம் முகாமில் பயனடைந்தனர்

            நான்கு நாட்களாக நடத்தப்பட்ட இம்முகாமில், கால்நடை பராமரிப்பு துறையுடன் இணைந்து கால்நடை வளர்போருக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. பெரும்பாலான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை முகாமிற்கு அழைத்து வந்தனர். முகாமில் பங்கேற்ற விவசாயிகளிடம் வேளாண் அறிவியல் மையத்தின் 2019-20 ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.